2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கடமை தவறிய பொலிஸ்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸார் ஒருவர் அந்தக் கடமையைச் செய்யாது போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த சம்பவம், வடமாகாண சபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. 

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து வடமாகாண சபை முன்றலில் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் செய்தனர். 

இந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்வதற்காக அங்கு வருகை தந்த போக்குவரத்துப் பொலிஸாரில் ஒருவர், போக்குவரத்துச் சீர்செய்யும் பணியை விடுத்து, கமெரா மூலம் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்தார். 

அவர், கையில் சிறிய ரக கமெராவொன்று இருந்ததுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அவர் புகைப்படம் எடுத்தார். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .