2025 மே 15, வியாழக்கிழமை

கிருசாந்திக்கு நினைவேந்தல்…

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம்  நேற்று (07) அனுஸ்டிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

1996ஆம் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படங்களும் தகவலும்:  எம்.றொசாந்த் )

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .