Janu / 2026 மார்ச் 29 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று, அரச சேவைகள் அவர்களிடம் சரியாக சென்றடையாமையாகும். அரச சேவைகள் மக்களை சென்றடைய வேண்டுமாயின் முறையான நிர்வாக அதிகார பகிர்வு அவசியமாகும். ஆனால், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் ஊடான நிர்வாக அதிகாரப் பகிர்வை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மலையக அரசியல் அரங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று நோர்வூட் நகரில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள்:
இதன்போது கருத்துத் தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா, "தித்வா அனர்த்தத்தோடு அனர்த்தமாக, நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகருக்கு அபகரித்துக்கொண்ட அரசின் நடவடிக்கை, நுவரெலியாவில் பிரதேச செயலகங்கள் ஊடான நிர்வாக அதிகாரப் பகிர்வை கேள்விக்குட்படுத்தியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இத்தகைய பாரபட்சங்களுக்கு எதிராக ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க மலையக அரசியல் அரங்கம் முன்வந்துள்ளது," எனத் தெரிவித்தார்.
ராமசந்திரன்














1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago