Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 20 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
சம்பூர் கடற்கரையை அண்மித்த சிறுவர் பூங்கா பகுதியில் இன்று(20) கண்ணிவெடி நிறுவனத்தினர் அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றம் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பகுதியில் மெக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் சென்ற 18 ந் திகதி முதல் முகாமிட்டு அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அகழ்வின் போது மேற்படி மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டுள்ளது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.பஸ்லீம் அகழ்வு பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.
அத்துடன் பிரதேசத்திற்கு முழுமையாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறும் மேலும் நீதிபதி,சட்டவைத்திய அதிகாரி,தடயவியல் அதிகாரிகள்,புவிச்சரிதவியல் அதிகாரிகள்,தொல்பொருள் திணைக்கழக அதிகாரிகள்,பொலிஸார் முன்னிலையில் எதிர்வரும் 23 ஆந் திகதி முழுமையான அகழ்வு பணிகள் நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மனித எச்சங்கள் கிடைத்துள்ள இடத்தில் இருந்து 40 மீற்றர் தூரத்தில் சம்பூர் படுகொலை நினைவுத் தூபி அமைந்துள்ளது.
11 minute ago
58 minute ago
1 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
58 minute ago
1 hours ago
29 Jul 2025