Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி சோரன்பற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நிலையத்தின் தலைவர் கைலாயபிள்ளை சிந்துயன் தலைமையில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, ஆலயத்திலிருந்து மங்கலக் கல் எடுத்து வரப்பட்டு மைதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.
முதலாவது கல்லினைப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நாட்டி வைத்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், சோரன்பற்று கணேச வித்தியாலய அதிபர் சோமசுந்தரம் சிவதாசன், சோரன்பற்று கிராம அலுவலர் அருள்பிரகாஸ் சுபாசினி உட்படப் பலரும் அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மங்கலச் சுடர் ஏற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கருத்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பூ. லின்டன்





















39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago