2025 மே 15, வியாழக்கிழமை

ஜப்பானின் அனுசரணையில்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் அனுசரணையில் யுனிசெப் அமைப்பினால்  வழங்கப்படுகின்ற குளிர்ச்சங்கிலி உபகரணங்களின் இரண்டாம் தொகுதியை சுகாதார அமைச்சு இன்று பெற்றுக்கொண்டது. 

இத்தொகுதியில் 750 தடுப்பூசி கொள்கலன்கள், 300 குளிர்ப் பெட்டிகள்,
100 பனி உறைநிலை குளிர் சாதனப்பெட்டிகள், 140 குளிர்சாதனப் பெட்டி
வெப்பநிலை கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளின்
வினைதிறன்மிக்க முகாமைத்துவத்துக்காக அன்ட்ரோய்ட் தத்தல்கள் (Android Tablets)
என்பன உள்ளடங்குகின்றன.



தடுப்பூசியின் தரம் மற்றும் வினைத்திறனை பேணும்
விதத்தில் போதிய வெப்பநிலையுடன் தேவையான களஞ்சியப்படுத்தல்
நிலைமையில் தடுப்பூசிகளை வைத்திருக்க இக் குளிர்ச்சங்கிலி உபகரணங்கள்
பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



இப்பொருட்கள் இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் திரு. சுகியாமா அகிரா
மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி திரு. கிரிஸ்டியன் ஸ்கூக் ஆகியோரால்
சுகாதார அமைச்சர் திரு. கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் இன்று
கையளிக்கப்பட்டன.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .