2025 மே 24, சனிக்கிழமை

திறந்து வைப்பு…

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை மாவட்டம் உஹன பிரதேச பொறியளாலர் காரியாலயம், கொணாகொல்ல மற்றும் பறகஹாகலே நிலைய பொறுப்பதிகாரி காரியாலயங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நேற்று (19) திறந்து வைத்தார்.

அம்பாறை 3ஆம் கட்ட நீர் வழங்கல் திட்டம் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களில் சில பகுதிகள் உட்பட 40,000 நீர் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்மூலம் 200,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் பைசால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், சிறியானி விஜயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மஞ்சுள பெர்ணாந்து, ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அப்துல் மஜீத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X