2025 ஜூலை 23, புதன்கிழமை

தேசிய தீபாவளி விழா...

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (15) பிற்பகல் நடைபெற்றது.

 

இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தயாராகி வருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .