2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நட்சத்திர ஆமைகள் கடத்தல் முறியடிப்பு...

Princiya Dixci   / 2016 மே 08 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்சத்திர ஆமைகளைக் கடத்திச்செல்ல முற்பட்ட நால்வர், புத்தளம், பல்லம பகுதியில் வைத்து, நேற்று சனிக்கிழமை (07) அதிகாலை 4.30க்கு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நால்வரும் ரெஜிபோம் பெட்டியொன்றினுள் நட்சத்திர ஆமைகளை வைத்து, வானொன்றில் கடத்த முற்பட்ட போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், இதற்கு முன்னரும் பல தடவைகள் ஆமைகளைச் சட்டவிரோதமாகக் கடத்துவதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 25 நட்சத்திர ஆமைகளும், இன்று ஞாயிற்றுக்கிழமை (08), தப்போவ சரணாலயத்திலும், நவகத்தேகம 5ஆம் கட்டைப் பகுதியிலும் விடுவிக்கப்பட்டன.

குறித்த நட்சத்திர ஆமைகள், வரல் நிலங்களில் வாழக் கூடியன என்றும் 100 ஆண்டுகளுக்கு ஆயுட்காலம் உடையன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: ஹிரான் பிரியங்கர)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .