2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பட்டமளிப்பு விழா...

Princiya Dixci   / 2016 ஜனவரி 19 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை முதல் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.

இன்று மற்றும் நாளை புதன்கிழமை (20) ஆகிய இரு தினங்களில் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் 1,521 பேர் நேரடியாக சமூகமளித்து பட்டங்களைப் பெறவுள்ளனர்.

கலைமாணி, தொழில்நிர்வாக மாணி, நுண்கலை மாணி, சட்டமாணி, மருத்துவ சத்திரசிகிச்சை மாணி, விஞ்ஞான மாணி, மருத்தகவியல் மாணி, சித்த வைத்திய சத்திரசிகிச்சை மாணி, முதுமாணி, பட்டப்பின் தகைமைச் சான்றிதழ், வியாபார முகாமைத்துவ மாணி ஆகிய மாணிகளில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வளாகங்களில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .