Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 11 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விசேட பொது பட்டமளிப்பு விழா, வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் மூன்று அமர்வுகளாக இன்று (11) நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 656 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதலாவது அமர்வில் 189 பேருக்கும், இரண்டாவது அமர்வில் 220 பேருக்கும், மூன்றாவது அமர்வில் 247 பேருக்கும் பட்டமளிப்பு நடைபெற்றது.
பட்ட மேற்படிப்பு முதுமானி பட்டம் தத்துவம் ஒருவரும், பட்ட மேற்படிப்பு முதுமானி கலைப் பட்டம் ஒருவரும், பட்ட மேற்படிப்பு முதுமானி கலைப் பிரிவில் 83 பேரும், பட்ட மேற்படிப்பு முதுமானி பொருளாதார அபிவிருத்தி பிரிவில் 2 பேரும், தாதியர் விஞ்ஞான பிரிவில் 21 பேரும், விஞ்ஞான பிரிவில் 62 பேரும், கலைப் பிரிவில் 306 பேரும், விஞ்ஞான முகாமைத்துவப் பிரிவில் 3 பேரும், கலை தொடர்பாடல் பிரிவில் 2 பேரும், கலைப் பிரிவு மொழித்துறையில் 14 பேரும், வர்த்தக முகாதை;துவப் பிரிவில் 81 பேரும், வர்த்தகத் துறையில் 60 பேரும், திருமலை வாளாகத்தில் வெளிவாரியாக பயின்ற வர்த்தக முகாமைத்துவப் பிரிவில் 14 பேரும், வர்த்தகத் துறையில் ஒருவரும், கலைப் பிரிவில் 5 பேரும் பட்டம் பெற்றனர்.
(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
5 hours ago