Editorial / 2025 நவம்பர் 24 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பருத்தித்துறையில் சனிக்கிழமை (22) அன்று முன்னெடுக்கப்பட்டது.

கனடா வாழ் தாயக உறவுகளின் ஆதரவுடன், யாழ். மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
மாவீரர்கள் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் மாதிரி கல்லறைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல், உபதவிசாளர் தே.தேவராஜேந்திரம், வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர் பெற்றோர், ரித்துடையோர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


11 minute ago
23 minute ago
33 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
33 minute ago
5 hours ago