2025 மே 21, புதன்கிழமை

பலத்த காற்று…

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் நேற்று வீசிய பலத்த காற்றாலும் கடும் மழையாலும் வீடுகள் உடமைகள் சேதமடைந்துள்ளதுடன், போக்குவரத்து, மின், தொலைபேசி இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு மத்தி கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட சின்னலெவ்வை வீதியில் இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வேம்பு மரம் முறிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டி, இலத்திரணியல் பொருட்கள் மற்றும் வீதியில் தொலைபேசி வயர்கள், மின்சாரசபையின் இணைப்புக்களுக்கு சேதத்துக்குள்ளாகின.

மரம் விழுந்துள்ளதால் வீதியில் போக்குவரத்து செய்ய முடியாமல் உள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை, இலங்கை மின்சாரசபை, சிறிலங்கா ரெலிகொம் என்பனவற்றின் வேலைப்பகுதி ஊழியர்கள் பார்வையிட்டு சென்றுள்ளதுடன், மரங்களை துப்பரவுசெய்து அகற்ற வேண்டிய  மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துளனர்.

அதேநேரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.

(படப்பிடிப்பு: கே.எல்.ரி.யுதாஜித்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X