Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, டயகம - ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் இன்று (05) மாலை 3.30 மணியளவில் சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 28 பேர் படுகாயமடைந்துள்ளனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 28 பேரில் 6 பேர், பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளனரெனவும் ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றரெனவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு மாற்றப்பட்டவர்கள் பெண் ஒருவர், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(படப்பிடிப்பு: எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஸ்)





7 minute ago
23 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
55 minute ago
1 hours ago