Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னிப் படைத்தலைமையகம், 59வது படையணி, 64 வது படையணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டம், மாமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) காலை 9.00 மணியளவில் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து சிறப்பித்ததுடன் நிகழ்வினை ஆரம்பித்தும் வைத்துள்ளார் .
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்ததை பேணும் நோக்கில் இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் எண்ணத்திலும் வழிப்படுத்தலிலும் இந்த நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சித்திதைப் புத்தாண்டின் பண்பாட்டு விழுமியங்களை மாதிரி வடியில் உருவாக்கியிருந்தததுடன் ஆற்றுகையினையும் நிகத்தியிருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.ஜெயகாந், வன்னி படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் தினேஸ் நாணயக்கார, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், 59 வது படையணியில் தளபதி, 64 வது படையணியின் தளபதி, மதகுருமார்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025