Editorial / 2026 மே 12 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர். லெம்பேட்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (12), மன்னாரில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தின் வடுக்களை நினைவுபடுத்தும் விதமாகக் ‘கஞ்சி’ காய்ச்சப்பட்டு, அங்கிருந்த உறவுகள் மற்றும் வீதியால் பயணித்த பொதுமக்களுக்குப் பகிரப்பட்டது. 2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும், பசிப்பிணியையும் உலகிற்கு உணர்த்தும் அடையாளமாக இந்த நினைவேந்தல் கஞ்சிப் பகிர்வு வருடாந்தம் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல், இன்று மன்னார் மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையிலும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






26 minute ago
35 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
57 minute ago