2026 மே 12, செவ்வாய்க்கிழமை

மாணவியை கடத்திய குடும்பஸ்தர் கைது

Janu   / 2026 மே 12 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை, சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து கடத்தி சென்ற திருமணமான இளைஞர் ஒருவர் தனமல்வில பகுதியில் வைத்து திங்கட்கிழமை (11) அன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை பிரதேசத்தை சேர்ந்த தனது மகள் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்களால் திங்கட்கிழமை (11) காலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனமல்வில பொலிஸாரால் சர்வோதய சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடையில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, வெல்லவாய திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞரிடம் வினவியபோது, பின்னால் அமர்ந்திருப்பவர் தனது தங்கை என பதிலளித்துள்ளார்.

எனினும், அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தபோது, அவர்கள் இருவரும் அத்திமலை கொட்டியாகலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

உடனடியாக இது குறித்து அத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணையில், காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மாணவி இவர்தான் என்பதும், இவரை கடத்தி வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய திருமணமான ஒரு இளைஞர் என்பதும் தெரியவந்தது.

தற்போது சந்தேகநபரும் மாணவியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அத்திமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தணமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டார தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .