2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழில் ஆர்ப்பாட்டம்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுந்துநெரித்துக் கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களால் செவ்வாய்க்கிழமை (22) கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

'சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி வேண்டும்', 'குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம்' மற்றும் 'சிறுமியை கொலை செய்த கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்' ஆகிய வாசகங்களை தாங்கியவாறு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விரிவுரைகளைப் புறக்கணித்து மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - செல்வநாயகம் கபிலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .