2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விடுதலையை வலியுறுத்தி...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சிறைக்கைதிகள் தினத்தையொட்டி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம், யாழ். மத்திய பேருந்து நிலைய முன்றலில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட ஏழு அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டதினை முன்னெடுத்தனர்.

'அஹிம்சை போராட்டத்துக்கு மதிப்பளித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயக அரசே'இ 'தேசிய அரசாங்கம் எமது உறவுகளை விடுதலை செய்யுமோ?' போன்ற வாசகங்களை தாங்கி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பில் வடமாகாண சுற்று சூழல் அமைச்சர் பொ.ஐங்கநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான இம்மானுவல் ஆனோல்ட், எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் மற்றும் ஏ.பரஞ்சோதி ஆகியோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .