2025 மே 21, புதன்கிழமை

விபத்து…

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள பாலத்துக்கு அருகில், வாகன நெரிசல் காரணமாக நிறுந்திய மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ்ஸொன்று மோதி, இன்று (28) விபத்துக்குள்ளாகியது.

முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் பாதசாரிகள் கடக்க முற்பட்ட போது, பிரதான வீதியில் வந்த லோறி நிறுத்தப்பட்டதையடுத்து, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வேளையில், மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த தனியார் பஸ், குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் காயங்களுக்குள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ்  காரியாலயத்தின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.

(படப்பிடிப்பு: எஸ்.சபேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X