2025 மே 21, புதன்கிழமை

விருது வழங்கி கௌரவிப்பு..

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னதீப தேச அபிமான்ய சமூக சிறப்பு விருதினை, சமூக சேவையாளர் எம்.ஏ.எம். ஸப்ரின் பெற்றுக்கொண்டார்.

மலையக, கலை கலாச்சார அமைப்பு மற்றும் என்.பி.சி வானொலி வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் இந்த விழாவில் ஸப்ரினுக்கு இந்த விஷேட விருது வழங்கப்பட்டுள்ளது. 

சுமார் 23வருட அரச சேவை அனுபவங்களை கொண்ட இவர், தற்போது கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக பணிபுரிகின்றார்.

இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களம், வெளிநாட்டு அமைச்சு பிரான்சில் உள்ள இலங்கை தூதராலயம், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றவர்.

அகில இலங்கை சமாதான நீதவானான இவர், நீதியமைச்சின் அங்கிகரிக்கப்பட்ட மும்மொழி மொழி பெயர்ப்பாளர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் அபுசாலி மற்றும் சுல்பிஹா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார் (படப்பிடிப்புஏ.எம்.ஏ.பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X