Shanmugan Murugavel / 2016 மார்ச் 03 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியில் அண்மையில் ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளரான றயன் ஹரிஸ், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநர் பதவியை ஏற்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் தற்போதைய பந்துவீச்சுப் பயிற்றுநரான மக் டேர்மட், இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருடன், அப்பதவியிலிருந்து விலகவுள்ளார். அவரது இடத்தில் ஏற்படும் வெற்றிடத்துக்கே, தான் தயாராக இருப்பதாக றயன் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
36 வயதான றயன் ஹரிஸ், கடந்தாண்டு ஜூலையில் ஓய்வுபெற்றதோடு, ஓய்வுபெற்றதன் பின்னர், 19 வயதுக்குட்பட்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணியின் பயிற்றுநராகச் செயற்பட்டிருந்ததோடு, பிக் பாஷ் லீக் போட்டிகளில் பிறிஸ்பேண் ஹீற் அணியோடு இரண்டு போட்டிகளில் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியளிக்கக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஹரிஸ், எனினும், அப்பதவிக்குப் பொருத்தமானவரைத் தெரிவதற்கான பொறுப்பும் அதிகாரமும், பயிற்றுநர் டெரன் லீமனிடமும் தேர்வாளர்களிடமுமே காணப்படுகிறது என்பதை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago