Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியை நடாத்துவதற்கு, ஜேர்மனியின் டஸெல்டோர்ப் நகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரை நடாத்துவதற்கான வாய்ப்பை, இலண்டன் நிராகரித்ததைத் தொடர்ந்தே, ஜேர்மனுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடரை நடாத்துவதற்கு, 35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் செலவாகுமென மதிப்பிடப்படும் நிலையிலேயே, இவ்வாய்ப்பை, இலண்டன் நிராகரித்திருந்தது.
104ஆவது தடவையாக இடம்பெறவுள்ள இத்தொடரின் முழுமையான விவரங்கள், அடுத்தாண்டு ஜனவரி 14ஆம் திகதி வெளியிடப்படுமென, அறிவிக்கப்படுகிறது.
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள போட்டிகள், பிரான்ஸிலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
7 hours ago