Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்சிலோனாவின் லியனொல் மெஸ்ஸி, உலகின் முதல்நிலை கால்பந்தாட்ட வீரர் தானென்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்துமுகமாக, லா லிகா தொடரின் 300 கோல்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், 299 கோல்களுடன் களமிறங்கிய மெஸ்ஸி, 25ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் உதவியுடன், 300ஆவது கோலைப் பெற்றார். அப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் அவர், மற்றொரு கோலையும் பெற, 301 கோல்களை அவர் மொத்தமாகப் பெற்றுள்ளார்.
இதன்படி, லா லிகா வரலாற்றில், அதிக கோல்களைப் பெற்றவர்கள் பட்டியலில் தனது முதலிடத்தை, லியனல் மெஸ்ஸி, ஸ்திரப்படுத்திக் கொண்டார். 334 போட்டிகளில் விளையாடியுள்ள லியனல் மெஸ்ஸி, 301 கோல்களைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில், அத்லெட்டி; பில்பாவோ அணியின் பிரபல முன்னாள் நட்சத்திரம் தெல்மோ ஸர்றா காணப்படுகிறார்.
மூன்றாவது இடத்தில், லியனல் மெஸ்ஸின் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ காணப்படுகிறார். 224 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 246 கோல்களைப் பெற்றுள்ளார்.
இதில், ரொனால்டோவுக்கு 31 வயது என்பதோடு, மெஸ்ஸிக்கு 28 வயது என்பதால், மெஸ்ஸியின் சாதனையை முறியடிப்பது, ரொனால்டோவுக்குக் கடினமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago