Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுக்கெதிரான தொடரொன்றில் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்சப் போவதில்லையென, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள 2 டெஸ்ட்கள், 5 ஒருநாள் சர்வதெசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியன அடங்கிய தொடரை உறுதிப்படுத்துமாறு, இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடிதமொன்றை அனுப்பியிருந்தது. எனினும், இதுவரை பதிலொன்றை இந்தியா அனுப்பியிருக்கவில்லை.
இருநாட்டு எல்லையில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இத்தொடர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் காணப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் மாநாட்டில் இந்தியாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஷஹாரியார் கான், அரசிடமிருந்து இதுவரை அனுமதியைப் பெறாமை நீதியற்றது எனத் தெரிவிப்பார் எனக் கூறியதுடன், அவ்வாறு அனுமதி பெறாவிட்டாலும், தொடரொன்றுக்காக இந்தியாவிடம் கெஞ்சப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago