2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனானார் அந்தோனி ஜோஸுவா

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டே சுற்றுக்களில் லண்டன் ஓ2 அரங்கில் இடம்பெற்ற போட்டியில் சாள்ஸ் மார்ட்டினை தோற்கடித்த அந்தோனி ஜோஸுவா, தனது 16ஆவது தொழில்முறைப் போட்டியிலேயே உலக குத்துச்சண்டை சம்மேளனத்தின் உலக அதிபார குத்துச்சண்டை பட்டத்தை கைப்பற்றினார்.

பிரித்தானியரான அந்தோனி ஜோஸுவா, வலது கையால் மோதி அமெரிக்கரான சாள்ஸ் மார்ட்டினை நிலத்தில் வீழ்த்தியிருந்ததோடு மறுபடியும் மீண்டுமொரு முறை வீழ்த்த, நடுவர் போட்டியை இடைநிறுத்தினார்.

பிரித்தானியாவின் ஆறாவது உலக அதிபாரக் குத்துச்சண்டை சம்பியன் அந்தோனி ஜோஸுவா என்பதோடு, ஒலிம்பிக் சம்பியனாக இருந்து கொண்டே உலக அதிபாரக் குத்துச்சண்டை சம்பியன் பட்டம் வெல்லும் மூன்றாவது நபர் அவராவார். தவிர, இவ்வாறான பெருமையை பெரும் முதலாவது பிரித்தானியர் அவராவார்.

மேற்படி வெற்றியுடன், உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு, உலக குத்துச்சண்டை நிறுவன பட்டங்களைக் கொண்டிருக்கும் சக பிரித்தானியரான  டைசன் பியூரியுடனான மோதலில் ஈடுபடுவதற்கான மேலுமொரு படியை அந்தோனி ஜோஸுவா தாண்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .