2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

'கலந்துரையாடலுக்குத் தயார்'

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 04 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் சம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது வெளிப்படுத்திய விமர்சனங்களைத் தொடர்நது, அவ்விடயம் தொடர்பான கலந்துரையாடலுக்குத் தயாராக இருப்பதாக, கிரிக்கெட் சபையின் தலைவர் டேவ் கமரோன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிறீமியர் லீக் தொடர் முடிவடைந்த பின்னர், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த மீளாய்வு, ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, பொதுவான ஒரு நிலைப்பாட்டைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெறுமென அவர் அறிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை மீது டெரன் சமி முன்வைத்த விமர்சனங்களை 'பொருத்தமற்ற கருத்துகள்" எனத் தெரிவித்த அவர், அது குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், வீரர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட முடியாது எனவும் மேற்கிந்திய வீரர்களின் சங்கத்துடன் மாத்திரமே கலந்துரையாட முடியுமெனத் தெரிவித்துவந்த அவர், தற்போது வீரர்களுடனும் கலந்துரையாடத் தயாரெனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிராந்தியத்தின் சிறந்த வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக விளையாடுவதை உறுதிப்படுத்த முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்கள் தவிர, அணியின் தேர்வாளர்கள், அணி முகாமைத்துவம், மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் சங்கம் ஆகியனவும் இதன்போது சந்திக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .