Shanmugan Murugavel / 2016 மார்ச் 06 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் மேற்கொள்ளப்பட்ட நிர்ணயம் தொடர்பாக முறைப்பாட்டை மேற்கொண்டதாக உறுதிப்படுத்திய அல்வியரோ பீற்றர்சன், எனினும் அதில், எந்தவிட பங்கெடுப்பையும் அவர் மறுத்துள்ளார். இவ்வாறு தகவல்களை வெளிப்படுத்திய முதலாவது தென்னாபிரிக்க வீரர் இவராவார்.
பீற்றர்சன் விசாரிக்கப்படுவதாக விஸ்டன் இந்தியாவில் வெளியான ஒரு ஆக்கத்திற்கு பதிலளித்து பீற்றர்சன் வெளியிட்ட தொடர் டுவிட்களிலேயே மேற்படித் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
நான் எந்த விசாரணையின் கீழும் இல்லை என்றும் இவ்விடயத்தை தான், தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி டொனி ஐரிஷிடமும் ஊழலுக்கெதிரான அதிகாரி லூயிஸ் கோலேயிடமும் முறையிட்டதாக தெரிவித்துள்ளார். தவிர, வேறு இரண்டு வீரர்களும் முன்வந்து, தாம் அணுகப்பட்டதாக தெரிவித்ததாக பீற்றர்சன் தெரிவித்துள்ளார்.
எனினும் பீற்றர்சன் மேற்கூறிய தகவல்களை தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் சங்கம் உறுதிப்படுத்தியிருக்கவில்லை.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மூவர் உட்பட சில மாகாண அணி வீரர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இதில் பலர், போட்டிகளை நிர்ணயம் செய்யும் குலாம் போடியின் கோரிக்கைகளை நிராகரித்திருந்ததாகவும் ஆனால் மேற்படி அணுகல்களைப் பற்றி முறைப்பாடு செய்திருக்கவில்லையென்றும் கூறப்படுகிறது.
17 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
1 hours ago