Shanmugan Murugavel / 2016 மார்ச் 13 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேல்ஸ் அணியின் இறுதிநேரப் போட்டிக்கு மத்தியிலும் அவ்வணியை வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி, 6 தேசங்கள் பங்குபற்றும் றக்பி சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன்களாகும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.
இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்ஸ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, இத்தாலி ஆகிய 6 நாடுகள் பங்குபற்றும் இத்தொடரில், முக்கியமான போட்டியில் வேல்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, மிகச்சிறப்பான முன்னிலையைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 19-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த அவ்வணி, அதன் பின்னர் கூட 25-7 என்ற புள்ளிகள் நிலையில் காணப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய வேல்ஸ் அணி, 25-21 என்ற நிலையை அடைந்த போதிலும், வெற்றிக்கான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒவெண் பரல், அவ்வணிக்காக 20 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
இந்த வெற்றியையடுத்து, பிரான்ஸ் - ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இப்போட்டியில் பிரான்ஸ் தோல்வியடைந்தால், இத்தொடரின் சம்பியன்களாக இங்கிலாந்து அணி தெரிவாகும். பிரான்ஸ் அணி அப்போட்டியில் வெற்றிபெற்று, பின்னர் இங்கிலாந்துக்கெதிரான போட்டியிலும் வெற்றிபெற்றால், இரு அணிகளிலும் வழங்கப்பட்ட புள்ளிகளுக்கும் பெறப்பட்ட புள்ளிகளுக்குமிடையில் அதிக வித்தியாசத்தைக் கொண்ட அணி, சம்பியனாகத் தெரிவாகும்.
13 minute ago
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
46 minute ago