Shanmugan Murugavel / 2016 மார்ச் 10 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை விளையாடியிருந்த நிலையில், அத்தொடரை, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.
கேப்டௌன் நியூலான்ட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (09) இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டூ பிளிசிஸ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஹஷிம் அம்லா, 62 பந்துகளில் 4, ஆறு ஓட்டங்கள், 8, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் டேவிட் மில்லர், 16 பந்துகளில் தலா 2, நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, நேதன் கூல்டர்-நைல் இரண்டு விக்கெட்டுகளையும் ஷேன் வொற்சன், ஜேம்ஸ் போக்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 44, ஷேன் வொற்சன் 42 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா, டேவிட் வோணர் ஆகியோர் தலா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக இம்ரான் தாகீர் 2, கஜிஸ்கோ ரபடா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக ஹஷிம் அம்லாவும் தொடரின் நாயகனாக டேவிட் வோணரும் தெரிவாகினர்.
11 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
1 hours ago