2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைகள் இரண்டும் பாகிஸ்தானை பாதிக்கின்றன

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அண்மையில் முடிவடைந்த இரண்டு ஆண்டுகளில், பாரியளவு வித்தியாசங்களை தான் சுட்டிக்காட்ட முடியும் என்று நினைக்கவில்லை என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

பிரச்சினையின் பெரிய பகுதி என்னவெனில், நிர்வாக மட்டமானது பெரும்பாலும் சரியான திசையில் செல்லவில்லை என மேலும் தெரிவித்த வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது, சபையின் தலைவராக ஷகாரியார் கானும் நிறைவேற்றுச் சபையின் தலைவராக நஜாம் சேதியையும் இரண்டு தலைகளாக கொண்டிருந்து, இருவரும் கிறிக்கெட்டை வெவ்வேறு திசைகளில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

இது தவிர, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தலைவரான ஷாகிட் அப்ரிடியின் மனப்போக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னோக்கி செல்வதற்கு உதவவில்லை என வக்கார் யூனிஸ் மேலும் தெரிவித்தார்.

தவிர, கிரிக்கெட் சபையிலுள்ளவர்கள் அணியை நோக்கி வரவேண்டும் பயிற்சியாளர்களை நோக்கி வரவேண்டும் எனத் தெரிவித்த வக்கார் யூனிஸ், அவர்கள் எங்களை நோக்கி வருவதன் மூலமே முன்னேற முடியும். ஏனெனில், கிரிக்கெட் அணிக்காகவே அவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்காக கிரிக்கெட் அணி இல்லை எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான வக்கார் யூனிஸ், ஆசியக் கிண்ணத்திலும் உலக இருபதுக்கு-20-இலும் பாகிஸ்தான் அணியின் மோசமான திறமை வெளிப்பாடுகளையடுத்து தனது ஒப்பந்தத்தில் மூன்று மாதங்கள் இருக்கையிலேயே கடந்த வாரம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .