2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

'பிறீமியர் லீக்கில் நான் விளையாடலாம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்தின் நட்சத்திர வீரரான லியனொல் மெஸ்ஸி, இங்கிலாந்தின் கால்பந்தாட்டத் தொடரான பிறீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த 28 வயதான மெஸ்ஸி, உலகளவில் அதிகம் பிரபலமான வீரர்களிலொருவராகக் காணப்படுவதோடு, பார்சிலோனாவின் முக்கிய வீரராக உள்ளார். எனினும் அவர், இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றலாம் என்ற வதந்திகள் பரவி வந்தன. எனினும், பார்சிலோனா அணியை விட்டு விலகும் எண்ணம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துத் தெரிவித்த மெஸ்ஸி, 'இங்கிலாந்து, இத்தாலிய கால்பந்தாட்டங்களை எனக்குப் பிடிக்கும். பெரிய போட்டிகள் அனைத்தையும் நான் பார்ப்பேன். ஆனால் நான் சொன்னது போன்று, பார்சிலோனா அணியுடன் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி, அங்கேயே ஓய்வுபெற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

தான் எண்ணியவாறு, அவ்வாறே நடைபெற வேண்டுமென எண்ணுவதாகத் தெரிவித்த அவர், தனது எண்ணத்தை மாற்ற வேண்டியேற்படாது போகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் கால்பந்தாட்டத்தில், எதையும் சொல்லிவிட முடியாது எனத் தெரிவித்த அவர், ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளுக்கு மாற்றமேற்படும் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், பிறீமியர் லீக் தொடரிலோ அல்லது "சீரீ ஏ" தொடரிலோ ஏதாவதொரு கட்டத்தில் பங்குபற்றுவதற்கான குறைந்தளவு வாய்ப்புகள் உள்ளதை அவர் ஏற்றுக் கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .