Shanmugan Murugavel / 2016 மே 08 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக் பட்டத்தை முதன்முறையாக கடந்த திங்கட்கிழமை (02) வென்ற லெய்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் அணியுடன் கடந்த சனிக்கிழமை (07) இடம்பெற்ற போட்டியில் கிடைத்த வெற்றியுடன் கொண்டாடியது.
எவெர்ற்றன் அணியுடான போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. லெய்செஸ்டர் சார்பாக, மூன்று போட்டித் தடையிலிருந்து மீண்ட அவ்வணியின் நட்சத்திர வீரர் ஜேமி வர்டி இரண்டு கோல்களையும் அவ்வணியில் நீண்டகாலமாக இருந்து வரும் அன்டி கிங் ஒரு கோலினையும் பெற்றிருந்தனர். எவ்வாறெனினும் பெனால்டி ஒன்றினை கோல்கம்பத்துக்கு மேலால் அடித்தமை காரணமாக தனது ஹட்ரிக் கோல் பெறும் வாய்ப்பை ஜேமி வர்டி தவறவிட்டிருந்தார்.
இதேவேளை, பிறீமியர் லீக் கிண்ணத்தினை, லெய்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவர் வெஸ் மோர்கனும் பயிற்சியாளர் கிளாடியோ றனைரியும் இணைந்து பெற்றிருந்தனர்.
தவிர, கடந்த சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், நோர்விச்சை 1-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்கடித்ததுடன், செல்சியை 2-3 என்ற கோல்கணக்கில் சந்தர்லேண்ட் தோற்கடித்ததுடன், ஸ்டோக்கை 2-1 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸ் தோற்கடித்ததுடன், வெஸ்ட் ஹாமை 4-1 என்ற கோல்கணக்கில் சுவான்சீ தோற்கடித்ததுடன், அஸ்டன் வில்லா, நியூகாசில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் கோலெதுவும் பெறப்படாமல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், வெஸ்ட் புரோம், பௌர்ன்மௌத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago