Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் ஸ்டோக் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி தோல்வியடைந்திருந்த நிலையில், யுனைட்டட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான சமிக்ஞையை, வான் கால் வெளிப்படுத்தியுள்ளார்.
அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து வான் கால் நீக்கப்படலாம் என கடந்த வாரம் வெளிவந்திருந்த செய்திகளுக்குக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்த வான் கால், தற்போது பதவியிலிருந்து விலகுவது பற்றியை சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது எதிர்காலம் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டபோது பதிலளித்த வான் கால், 'நானாகவே பதவி விலகலாம், ஆனால், அதுகுறித்து எட் வூட்வோர்டிடம் (கழகத்தின் உப தலைவர்) கலந்துரையாடுவேன். அவருடன் முதலில் கலந்துரையாடுவேன், அதன் பின்னர் எனது பணியாளர்களுடன் கலந்துரையாடுவேன். இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளது, ஆனால், அது குறித்து உங்களிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை. பொதுவில் கதைப்பது தொடர்பில் எனக்கு ஆர்வமில்லை" என அவர் தெரிவித்தார்.
எனினும், வான் காலின் எதிர்காலம் குறித்த கவனம், அதிகளவில் காணப்படும் நிலையில், செல்சி அணியுடன் இன்று இடம்பெறவுள்ள போட்டியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா எனக் கேட்கப்பட்டபோது, 'பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ஆனால், பதவியிலிருப்பேன் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
தனது பதவியை ஒழுங்காக ஆற்றுவதற்குத் தவறிவிட்டார் என்ற விமர்சனத்தை ஏற்க மறுத்த அவர், தன்னால் முடிந்தளவுக்குச் சிறப்பானளவு பணியை ஆற்றியிருப்பதாக எண்ணுவதாகத் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago