Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் 2ஆம் நாள் முடிவில், முழுமையான ஆதிக்கத்தை அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது.
மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 551 ஓட்டங்களுடன் தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.
முறையே 32, 10 ஓட்டங்களுடன் இன்றைய நாளைத் தொடங்கிய ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ் இருவரும், தங்களுடைய சதத்தைப் பூர்த்தி செய்தனர்.
துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா 144, ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 134, ஜோ பேர்ண்ஸ் 128, அடம் வோஜஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் கிறெய்க் பிறெத்வெய்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2ஆம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களுடன் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
துடுப்பாட்டத்தில் ஜேர்மைன் பிளக்வூட் 28, ராஜேந்திர சந்திரிகா 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், நேதன் லையன், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன் மூவரும், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்படி, 4 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 460 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி பின்னிலை வகிக்கிறது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago