Shanmugan Murugavel / 2016 மார்ச் 22 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்தமைக்கு, அவுஸ்திரேலியாவின் முதல் 6 ஓவர்களில், அவ்வணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றாமை முக்கியமான காரணமாக அமைந்ததாக, பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மோர்தஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பங்களாதேஷ் அணி, 156 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல் 6 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு, இறுதியில் 18.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மோர்தஷா, 'இந்த மைதானம், எப்போதுமே அதிக ஓட்டங்களைக் குவிக்கும் மைதானமாக இருந்தது. எனினும், நாங்கள் பெற்ற இலக்குடன் போராட முடியுமென நான் நினைக்கிறேன். முதல் 6 ஓவர்களும் முக்கியமானவை. எங்களால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடிந்திருக்கவில்லை. அதன் பின்னர் ஷேன் வொற்சனின் விக்கெட்டைக் கைப்பற்றினோம், ஆனால் அது பிந்திவிட்டது என நான் நினைக்கிறேன்" என்றார்.
இப்போட்டியில், பங்களாதேஷ் அணி 2 பிடிகளைத் தவறவிட்டிருந்ததோடு களத்தடுப்பிலும் சறுக்கியிருந்தது. அதிலும் முன்னேற்றம் காணப்பட வேண்டுமென, மோர்தஷா மேலும் தெரிவித்தார்.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago