2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மியாமி பகிரங்கத் தொடரை வென்றார் அஸரெங்கா

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோடோரியா அஸரெங்கா நேர் செட்களில் மியாமி பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு பட்டங்களை அடுத்தடுத்து கைப்பற்றியுள்ளார்.

26 வயதான அஸரெங்கா, 77 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 19ஆம் நிலை வீராங்கனையான 30 வயதான ரஷ்யாவின் ஸ்வெட்லெனா குஸ்நெட்சோவாவை தோற்கடித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன் இந்தியன் வெல்ஸ் பட்டத்தை வென்ற அஸரெங்கா, அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள தரவரிசையில், உலகின் முதல் ஐந்து வீராங்கனைக்குள் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸரெங்கா, இதற்கு முன்னர், 2009, 2011ஆம் ஆண்டுகளில் மியாமி பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .