2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மாஸ்ட்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்கில் ஒரேயணியில் முரளி, சங்கா

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆரம்ப மாஸ்ட்டேர்ஸ் சம்பியன்ஸ் லீக்குக்கான வீரர்களின் ஏலம் கடந்த திங்கட்கிழமை (07) டுபாயில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஏலத்தில் ஜக்ஸ் கலிஸ் (175,000 அ.டொலர்), அடம் கில்கிறிஸ்ட்(170,000 அ.டொலர்), போல் கொலிங்வூட் (140,000 அ.டொலர்), முத்தையா முரளிதரன் (120,000 அ. டொலர்) ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தனர்.

கப்ரிகோர்ன் கொமாண்டேர்ஸ்-மைக்கல் வோண், அப்துல் ரஸாக், போல் கொலிங்வூட், அன்ரூ சைமண்ட்ஸ், அஷ்வெல் பிறின்ஸ், உபுல் சந்தன, ரயான் மக்கலரன், ஜீதன் பட்டேல், ரிக்கி கிளார்க், ரோரி கிளின்வெல்ட், பென் லோலின், ரிஸ்வான் சீமா, ஜெனரைட் ஜோன்ஸ், சுனில் ஜோஷி, சலீம் எலகி

ஜெமினி அரேபியன்ஸ்-வீரேந்தர் சேவாக், குமார் சங்கக்காரா, முத்தையா முரளிதரன், கைல் மில்ஸ், சக்லைன் முஷ்டாக், ஜக்ஸ் ருடோல்ப், நவீட்-உல்-ஹசன், ஜஸ்டின் கெம்ப், போல் ஹரிஸ், பிராட் ஹொட்ஜ், ரிச்சர்ட் லெவி, அஷிஷ் பகை, கிரகாம் ஒனியன்ஸ், ஷிவ்நாராயணன் சந்திரபோல், சாதிக் அலி

லிப்ரா லெஜண்ட்ஸ்-ஹீத் ஸ்‌ரீக், ஸ்கொட் ஸ்டைரிஸ், பிரயன் லாரா, ஹேர்ஷல் கிப்ஸ், பிரண்டன் டெய்லர், ஜேம்ஸ் பிராங்ளின், ஜொஹான் போத்தா, ரொபின் பீட்டர்சன், பிடல் எட்வேர்ட்ஸ், மொஹமட் தகுயிர், நீல் கார்ட்டர், ஹமிஷ் மார்ஷல், கைல் ஜார்விஸ், ரமேஷ் பவார், சைமன் ஜோன்ஸ், டரன் கௌ

சக்ட்டிடாரியஸ் சோல்டியர்ஸ்-மஹேல ஜெயவர்தன, டேனியல் விட்டோரி, அடம் கில்கிறிஸ்ட், ஷேன் பொண்ட், குராம் கான், பில் மஸ்டார்ட், டினோ பெஸ்ட், நதன் ஹோரிட்ஸ், அல்விரோ பீற்றர்சன், மைக்கல் காபெரி, கிறிஷ்மர் சந்தோக்கி, ஜொனதன் ட்ரோட், யசிர் ஹமீட், முஷ்டாக் அகமட், கவின் ஹமில்டன்

வெர்ஜோ சுப்பர் கிங்ஸ்-கிரேமி ஸ்மித், அஸார் மஹ்மூட், பிரட் லீ, ஜோன்டி ரோட்ஸ், நீல் மக்கென்ஸி, ஜோன் மூனி, டேர்க் நனிஸ், ஒவைஸ் ஷா, ஜேம்ஸ் பொஸ்டர், முரளி கார்த்திக், மலிங்க பண்டார, கரித் பற்றி, ஹசன் ராசா, ஜேக்கப் ஓரம், ஹியூமாயூன் பர்காத், மொஹமட் யூசுஃப்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .