2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலாவது சாதிக்குமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரை, இலங்கை அணி நாளை ஆரம்பிக்கிறது. இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலாவது அவ்வணியால் சாதிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டித் தொடரில், அயர்லாந்து அணிக்கெதிரான 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரே, ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை நேரப்படி நாளை மாலை 3:15க்கு இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளதோடு, டப்ளினில் இடம்பெறவுள்ளது.

இலங்கையும் அயர்லாந்தும், இதுவரை 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளன. அதிலொரு போட்டி அயர்லாந்திலும் மற்றொரு போட்டி கிரெனடாவிலும் (மேற்கிந்தியத் தீவுகள்) இடம்பெற்றுள்ளன. அவை இரண்டிலுமே, இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

ஆனால், சிரேஷ்ட வீரர்களின்றிக் களமிறங்கும் இலங்கை அணி, இலகுவான வெற்றிகளைப் பெறுவது கடினமாக இருக்குமெனக் கருதப்படுகிறது. அதுவும், டெஸ்ட் போட்டிகளில் அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன போன்ற முக்கிய வீரர்கள், போர்மை வெளிப்படுத்தத் தவறியிருந்த நிலையில், இலங்கைக்கெதிரான தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்யும் வாய்ப்பு, அயர்லாந்துக்கு உள்ளது.

ஆனால், இங்கிலாந்துக்கெதிரான 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கும் ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக்கும் முன்னதாக, இலங்கை அணி போர்மைப் பெறுவதற்கு, அயர்லாந்துக்கெதிரான போட்டிகளை, இலங்கையால் பயன்படுத்த முடியும். அதைச் செய்யுமா இலங்கை என்பது தான் கேள்வியாக உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .