Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, அவ்வணி விற்கக்கூடாது என, அக்கழகத்தின் கௌரவத் தலைவர் பாசோ ஜென்டோ தெரிவித்துள்ளார்.
றியல் மட்ரிட் சார்பாகத் தனது பெயரை நிலைநாட்டிலுள்ள ரொனால்டோ, உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவராகவும் காணப்படுகிறார். ஆனால், றியல் மட்ரிட் கழகத்திலிருந்து அவர் விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, பரிஸ் செய்ன்ட்-ஜேர்மைன் அணிக்கோ அல்லது ரொனால்டோவின் முன்னாள் கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கோ அவர் செல்லலாமெனத் தகவல்கள் வெளியாகின.
எனினும், கருத்துத் தெரிவித்துள்ள பாசோ, 'ஒவ்வொரு நாளும் உங்களுடைய கழகத்துக்காக பல கோல்களைப் பெறும் ஒரு வீரரை, நீங்கள் எவ்வாறு விற்கப் போகிறீர்கள்? இல்லை, இல்லை. அத்தோடு, விற்கும் கழகமாக றியல் மட்ரிட் எப்போதும் இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வீரர்களை றியல் மட்ரிட் வாங்கியிருந்தது. மட்ரிட் விற்கக்கூடாது, அவர்கள் வாங்க வேண்டும். இங்குள்ள மக்களை கிறிஸ்டியானோ அறிவார். இக்கழகத்தின் அதிகாரிகள் அவரை அதிகம் விரும்புகின்றனர்" எனத் தெரிவித்தார்.
31 வயதான ரொனால்டோ, றியல் மட்ரிட் சார்பாக ஏறுமுகமானதும் இறங்குமுகமானதுமான பருவகாலத்தையே இம்முறை கொண்டிருந்தார். ஆனால், சம்பியன்ஸ் லீக் (13) தொடரிலும் டா லிகா (29) தொடரிலும் அக்கழகம் சார்பாக அதிக கோல்களைப் பெற்ற வீரராக அவரே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago