Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தான் இதுவரை கைப்பற்றாத சம்பியன் பட்டமான ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் நோக்கத்துடன், றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய போதிலும், முதற்சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவரும் உலகின் 141ஆவது நிலை வீரருமான ஜுவான் மார்ட்டின் டெல் பொட்ரோவை எதிர்கொண்ட நொவக் ஜோக்கோவிச், 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
வழக்கமான போட்டிகள், தனிநபர் போட்டிகளாக இருக்க, தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வியடைந்தமையை ஏற்றுக்கொள்ள முடியாத ஜோக்கோவிச், கண்ணீருடன் விடைகொடுத்தார்.
அதேபோல், ஒற்றையர் போட்டிகளில் அதிர்ச்சித் தோல்வியடைந்த அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், இரட்டையர் போட்டிகளில் தனது சகோதரியும் முதல்நிலை வீராங்கனையுமான செரினா வில்லியம்ஸூடன் களமிறங்கி, தங்களது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றபோதிலும், செக் குடியரசின் லூசி சபரோவா, பார்பரோ ஸ்ட்ரைகோவா ஜோடியிடம் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago