2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

300 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பிராவோ

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்று வரும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி சார்பாக விளையாடி வரும் டுவைன் பிராவோ, கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கெதிராக கடந்த திங்கட்கிழமை (11) பங்கேற்ற போட்டியில், இருபதுக்கு-20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேற்படி போட்டியில் டேவிட் மில்லரின் விக்கெட்டினை கைப்பற்றியபோதே டுவைன் பிராவோ, இருபதுக்கு-20 போட்டிகளில் தனது 300ஆவது விக்கெட்டினை கைப்பற்றிருந்தார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக முரளி விஜய் 42, மனன் வொஹ்ரா 38, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் குஜராத் லயன்ஸ் அணி சார்பாக டுவைன் பிராவோ 4, இரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆரோன் பின்ஞ் 74 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதுவரை, 292 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ, இப்போட்டியுடன் சேர்த்து 302 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .