Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில், ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கையில் இடம்பெற்ற இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்ற தொடரில் பங்கேற்ற 19 பேர் கொண்ட குழாமில் இருந்து ஐவர் நீக்கப்பட்டு, சரண நாணயக்கார சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்படித் தொடரில், இலங்கையணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற சரித் அஸலங்க, அணித்தலைவராக நீடிப்பதோடு, சகலதுறை வீரராக ஷம்மு அஷான் உப அணித்தலைவராக நீடிக்கிறார்.
உலகக் கிண்ணத்தின் லீக் பிரிவில், இலங்கை அணி, குழு பியில் கனடா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இலங்கை அணி, தனது முதலாவது போட்டியாக, கனடாவுடன் ஜனவரி 28ஆம் திகதி மோதவுள்ளது.
இலங்கை 19வயதுக்குட்பட்டோருக்கான குழாம்-கவீன் பண்டாரா, சலிந்து உஷான், ஷம்மு அஷான் (உதவி அணித்தலைவர்), சரித் அஸலங்க (அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, வனிது ஹஸரங்க, கமிந்து மென்டிஸ், சரண நாணயக்கார, விஷாட் ரந்திக, லகிரு சமரக்கோன், அசித பெர்னாண்டோ, லகிரு குமார, ஜெஹான் டேனியல், தமித சில்வா, திலான் நிமேஷ்
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago