Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட வேண்டிய நிலையில் பந்துவீசிய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸின் ஓவரில், முதல் நான்கு பந்துகளுமே ஆறு ஓட்டங்களாக விளாசப்பட்டு, இங்கிலாந்து அணி சம்பியனாகும் வாய்ப்பு இல்லாமற்போன நிலையில், பென் ஸ்டோக்ஸின் வலியை, இங்கிலாந்து அணி பகிர்ந்துகொள்ளுமென, இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
'என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் இலகுவானது. ஸ்டோக்ஸ், மிகவும் வருத்தமடையவுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அவர் அதனால் பாதிக்கப்படுவார். ஆனால், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் நாங்கள் பகிர்கிறோம், அணியாகவே நாம் இணைந்து காணப்படுகிறோம். வலிகளை நாம் பகிர்கிறோம், வெற்றிகளை நாம் பகிர்கிறோம் - இப்போதும் எதிர்காலத்திலும்" என்றார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் தவறுகளெதனையும் காண முடியவில்லை எனத் தெரிவித்த ஒய்ன் மோர்கன், பந்துவீச்சிலேயே தவறிழைத்ததாகக் குறிப்பிட்டார். குறித்த ஆடுகளத்தில், 180 தொடக்கம் 190 வரையிலான ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏறத்தாழ 40 ஓட்டங்கள் குறைவாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், 'ஏமாற்றந்தரும் இறுதி ஓவரின் பின்னர், கிடைக்கப்பெறும் எல்லா ஆதரவாலும் திணறுகிறேன். எனது நாட்டை, உலகக் கிண்ணமொன்றின் இறுதிப் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தியமை குறித்துப் பெருமையடைகிறேன். எங்களுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. மிகச்சிறந்த இறுதிப் போட்டியொன்றை வெற்றி கொண்டமைக்காக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
8 minute ago
12 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
41 minute ago