Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூலை 28 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி, இலங்கை அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பை தெரிவுசெய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்செய 2 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க, டசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்றைய தினம் இடம்பெறவிருந்த போட்டி, இந்திய அணியின் குருனால் பாண்டியா கொரோனா தொற்றுக்கு உள்ளானதால் இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago