2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தில் இலங்கைக்கு முதல் வெற்றி

A.P.Mathan   / 2014 மே 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் இங்கிலாந்தின் பிராந்திய அணியான கென்ட் அணிக்குமிடையில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 123 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 
 
முதலில் துடுபாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 51 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்னே 49 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 35 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் கென்ட் அணி சார்பாக ரொபி ஜோசப் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
பதிலுக்கு துடுப்பாடிய கென்ட் அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் பிலேக் 60 ஓட்டங்களையும், ஷாம் பில்லிங்ஸ் 29 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால், திசர பெரேரா, அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இலங்கை அணியில் லசித் மாலிங்கவை தவிர்த்து முழுமையான அணி போட்டியில் பங்குபற்றி இருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .