2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உலக கிண்ண இரண்டாவது போட்டி ஆஸி வசம்

George   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 111 ஓட்டங்களால் இங்கிலாந்து அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மெல்போர்ன்  மைதானத்தில் இன்று சனிக்கிழமை(14) ஆரம்மபமான இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 50 ஒவரில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ஓட்டங்களை குவித்தது.

343 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய  இங்கிலாந்து அணி, 41.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .