2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஜேர்மனி பயிற்றுவிப்பாளரின் பதவிக்காலம் 2018வரை நீடிப்பு

A.P.Mathan   / 2015 மார்ச் 14 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சம்பியன் ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லூயி, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண தொடர் வரை பயிற்றுவிப்பாளராக நீடிக்கப்பட்டுள்ளார். 

55 வயதான இவர், 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணம் வரையே பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரின் பயிற்றுவிப்பின் கீழ் மகுடம் சூடியுள்ளோம். மீண்டும் ஒரு தடவை அதை ருசி பார்க்க வேண்டும். எனவே, நல்ல முறையில் அணியை வழி நடத்தி செல்லும் லூயி மூலம் அதை நடத்த முடியும் என நம்புவதாக ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

2004ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இணைந்த ஜோக்கிம் லூயி, 2006ஆம் ஜேர்மனி உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஜேர்மனி அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 

நான் இந்த பதவி நீடிப்பை ஏற்றுள்ளேன். இந்த இள வயது அணியை வைத்து இன்னும் பல விடயங்களை செய்ய முடியும். நிறையவே எதிர்கால திட்டங்கள் எமக்குள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்தி தொடர்ந்தும் சிறந்த அணியாக திகழ முடியும் என  பயிற்றுவிப்பாளர் ஜோக்கிம் லூயி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .