2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைபற்றியது பாகிஸ்தான்

A.P.Mathan   / 2015 ஜூலை 08 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஏழு விக்கெட்களால் வெற்றி கொண்டதையடுத்து  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 : 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
 
ஐந்தாம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி வெற்றிக்கு மேலும் 147 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் சதம் பெற்றிருந்த ஷன் மசூட்டின் விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களையும், ஷன் மசூத் 125 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இருந்த இலங்கையணி தமது சகல விக்கெட்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில்  அதிகபட்சமாக டிமுத் கருணாரட்ன 130 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யாசிர் ஷா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
 
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி வெறும் 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் பறிகொடுத்திருந்தது. அதிகபட்சமாக சஃப்ராஸ் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக தம்மிக பிரசாத், நுவான் பிரதீப், தரிந்து கௌஷால் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
 
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கையணி 313 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மத்தியுஸ் 122 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் இம்ரான் கான் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
 
போட்டியின் ஆட்டநாயகனாக யூனிஸ்கானும், போட்டித்தொடரின் ஆட்டநாயகனாக யாசிர் ஷாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .