2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிரான இந்திய குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஜூலை 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய டெஸ்ட்  குழாமின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 32வயதான சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் இறுதியாக 2011ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டியொன்றில் பங்கேற்றுள்ளார்.

பங்களாதேஷக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் குழாமிலிருந்த கரண் ஷர்மாவுக்கு பதிலாக அமித் மிஷ்ரா இடம்பெற்றமையே, அக்குழாமில் ஏற்படுத்தப்பட்ட ஒரேயொரு மாற்றமாகும்.

உடற்தகுதி பிரச்சினைகள் காரணமாக கரண் ஷர்மாவும், மொகமட் ஷமியும் அணித்தேர்வின்போது கவனத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை. விரல் முறிந்தமை காரணமாக இம்மாதம் இடம்பெற்ற சிம்பாப்வே தொடரிலிருந்து கரன் ஷர்மா விலகியிருந்த வேளை, முழங்காலில் மேற்கொள்ளப்பட்டிருந்த சத்திரசிகிச்சையிலிருந்து மொகமட் ஷமி குணமடைந்து வருகிறார்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:  விராத் கோலி (தலைவர்), வருண் ஆரோன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவான், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ரிதிமான் சகா, இஷாந்த் ஷர்மா, அமித் மிஷ்ரா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .